அதன் பிறகு திருப்பூர் நிறுவனத்தில் வேலை, சொந்த ஊரில் நில புரோக்கர் என பணியாற்றினார். கடந்த 37 ஆண்டுகளாக வாரப்பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை, நகைசுவை துணுக்குகள் எழுதி வருகிறார். இவருக்கு மனைவியும், மகனும், ஒரு சகோதரரும், சகோதரியும் உண்டு.
தனது அனுபவம் குறித்து 'ஜோக்ஸ் எழுத்தாளர்' அதிரை புஹாரி நம்மிடம் கூறுகையில்....
என்னுடைய முதல் ஜோக்ஸ் கடந்த 16-11-1977 அன்று குமுதத்தில் வெளியானது. இதற்கு சன்மானமாக ₹ 7.5 மணியாடர் அனுப்பினார்கள். துக்ளக் இதழில் 1000த்திற்கும் மேற்பட்ட எனது கேள்விகள் பிரசுமாகியுள்ளது. தொடர்ந்து தினத்தந்தி, குமுதம், விகடன், குங்குமம், ராணி, கல்கி, பாக்கியா, தினமணிக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகியுள்ளது. ஆல் இந்தியா ரேடியோவில் எனது பெயர் பலமுறை ஒலிப்பரப்பட்டுள்ளது. இலங்கை ஒலிப்பரப்பின் தென்னிந்தியா சேவையில் எனது விமர்சகர் விருப்பம் நிகழ்ச்சி 15 நிமிடம் ஒலிப்பரப்பாகியது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பட்டுக்கோட்டையில் சன் டிவியின் சார்பாக நடந்த டிராஜேந்தரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'மெல்ல தமிழ் இனி சாகும் என்ற பாரதியின் கூற்று பொய்...' எனும் தலைப்பில் பேசினேன். இவை அனைவரையும் கவர்ந்தது.
இன்றைய பிரபல ஜோக்ஸ் எழுத்தாளர்களில் அனைவருடன் நல்ல நட்பு உண்டு. கடந்த 1980 ஆண்டு முதல் ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவரின் திறமைகளை பாராட்டி மகிழ்வது உண்டு. இப்போது உள்ளவர்களிடம் அந்த அன்யோயம் இல்லை என்பதில் மட்டும் சின்ன வருத்தம் எப்போதும் உண்டு' என்றார்.
நபர் 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு திருடன் வந்து திருட முயற்சிக்கிட்டு....
ReplyDeleteநபர் 2 : அய்யோவ்வோ அப்புறம் ....?
நபர்1 :எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடசேர்ந்து பணத்தை தேடினேன்
நபர் 2 : என்னதூ
நபர் 1 : ஆனாலும் கடைசிவரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை என்கேவட்சிருக்கானு எங்களாலே கண்டுபிடிக்க முடியல.
வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்பார்கள் , எங்களை சிரிக்கவைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எனது காக்கா அதிரை புகாரி அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன மக்களின் எண்ணம் பற்றிய விளக்கம் அதாவது சிலர் புகழ்ச்சியாக எண்ணும் அநேகம் விசயங்கள் சிலருக்கு ஏளனமாகவும் தெரியுமாம் .உதாரணம் ..
ReplyDelete'ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு'
இதையே இப்படியும் ஏளனமாக கூறும் கருத்து ஒற்றுமையில்லா மக்கள்..
'கடல் வற்றி கருவாடு தின்ன நினைத்த கொக்கு குடல் வற்றி செத்ததாம்'
சகோதரர் செய்யது புஹாரி் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கைகளில் எழுதிய கேள்விகளிலேயே எனக்குப் பிடித்ததும் அதற்கு துக்ளக் ஆசிரியர் எழுதிய பதிலும். துக்ளக் ஆசிரியர் சோவிடம் மழை ஏன் சோவென்று பெய்கிறது என்று கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு சோ அளித்த பதில் மழை சோவென்று பெய்யாமல் செய்யது புகாரி என்றா பெய்யும்? என்று பதிலளித்திருந்தார். அது இன்னும் என் நினைவில் நின்று நிழலாடுகிறது..சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நான் அவரை நேரில் சந்தித்தபோது நினைவுபடுத்தினேன்
ReplyDelete