.

Pages

Wednesday, March 11, 2015

அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் புதிதாக பொறுப்பேற்பு !

அதிரை காவல் துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் இன்று முதல் பொறுப்பேற்றார்.

முன்னதாக அதிரை காவல்துறை ஆய்வாளராக திரு ரவிச்சந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக அதிரை அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் கவனித்து வந்தார்.

இந்நிலையில் இன்று முதல் அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு சக போலீசார்கள் - பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் - சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் அவர்களை பற்றிய சிறு குறிப்பு:
இவரது சொந்த ஊர் மன்னார்குடி. முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். தஞ்சை மெடிக்கல் காலேஜ், திருவிடைமருதூர், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றினார். இதன் பிறகு கடந்த [ 28-06-2014 ] அன்று இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நடுக்காவேரி என்ற ஊரில் பணியாற்றினார். இன்று முதல் அதிரை காவல் துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.
'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்:

7 comments:

  1. Congratulations. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அதிகமாக பொது சேவயில் இடுபட்டிற்க்கும் மரைக்காவுக்கு நன்றி

    ReplyDelete
  4. காவல்துறை அய்யா ஆனந்த தாண்டவம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மக்களின் நன்மதிப்பை பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அதிகமாக பொது சேவயில் இடுபட்டிற்க்கும் மரைக்காவுக்கு நன்றி

    ReplyDelete
  7. புதிய காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள். அமைதிப் பூங்காவான அதிரை தொடர்ந்து அமைதியாக இருக்க புதிய காவல்துறை அதிகாரியின் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் அதிரை நியூஸ் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ள சகோ. இத்ரீஸ் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.