பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை அருகே இன்று [ 16-05-2015 ] காலை 9 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
உண்ணாவிரதம் துவங்கிய சில நிமிடங்களில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் உண்ணாவிரத போராட்டம் குறித்து உரையாற்றினார். இதை தொடர்ந்து ஊர் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் 24 மணிநேர மருத்துவ சேவையின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்யப்பட்ட ஆணையை பொதுமக்களிடம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். D. மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோர் அதிரை பேரூராட்சி தலைவருக்கு குளிர் பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
அரசின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியில் பொறுப்பேற்பார் எனக்கூறப்படுகிறது. இவர் அதிரையில் முழுமையாக தங்கி மருத்துவ சேவையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
உண்ணாவிரத முடிவில் கோரிக்கை வெற்றிபெற காரணமாயிருந்த தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். D. மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின், ஊர் அனைத்து ஜமாத் தலைவர்கள், கிராம பஞ்சாயத் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இரவு நேர மருத்துவ சேவைக்காக கூடுதல் மருத்துவர் நியமனம் தொடர்பாக பிறபிக்கப்பட்ட உத்தரவு கடிதம்:
ஆதரவு அளித்தவர்களுக்கு ஒரு கேள்வி இவ்வளவு செய்த சேர்மன் அதே அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஈசிஆர் முதல் மருத்துவமனை வரை உள்ள சாலையை சரி செய்வாரா?
ReplyDeleteஇருக்கும் ரோட்டுக்கு ரோடு சரி பண்ணினாரா என்று கேட்கிறீர்கள் இன்னொருத்தர் சின்ன சிங்கப்பூரா மாற்றினாரா என்று கேட்கிறார் இன்னும் ஒரு சில பகுதியில் ரோடு இல்லேயே, " ஏம்மா இப்படி பண்ணுறீங்க "
Deleteமுக்கியமான பகுதியில் திறம்பட செய்துள்ளார் என்று சொல்லலாம்.
// முக்கியமான பகுதியில் திறம்பட செய்துள்ளார் என்று சொல்லலாம்.// மருத்துவமனை சாலை முக்கியமானதல்லவா?
Deleteஇரவு நேர மருத்துவர் நியமிப்பதில் இவ்வளவு இடற்பாடுகள் இருக்கும் போது இனி சிகிச்சை எப்படியென்று தெரிய வரும் விபத்தில் சிக்கியவருக்கு "கோல்டன் ஹவர்ஸ்" என்று சொல்லக்கூடிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்க்கான மருத்துவ வசதிகள் / சிறப்பு மருத்துவர் உள்ளனவா என்று யாருக்கு தெரியும்? முதன் முதலாக உண்ணாவிரதப் போராட்டத்திற்காக வந்தவர்களை பாராட்ட வேண்டும் ஏன்னா இதற்க்கு முன் வராவிட்டாலும் ஏழைகளின் நிலைமை உணர்ந்து வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சேர்மன் அவர்களே!
ReplyDeleteநூர் அவர்களே நீங்கள் கேட்பது சரிதான், ஆனால் ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இதுவரை எதுவும் செய்யாதவரைக்கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி. வரும் ஒவ்வொன்றாக வரும். அதிரை எக்ஸ்ப்ரஸில் பார்த்தீர்களா? உண்ணாவிரதத்திற்கு வந்தவர்களை கேடும்பு சொல்லி அனுப்பினார்களாம். சேர்மன் அவர் சொந்த ஆதாயத்திற்கா இதை செய்கிறார்?. துணை நிற்கணும் அல்லது ஒதிங்கி நிற்கணும். கெடுவான் கேடு நினைப்பான்.
ReplyDeleteஇப்படி பட்டவர்கள் இருக்கும்பொழுது எங்கிருந்து நிதி வரும் சாலைகள் அமைக்கவும் செப்பனிடவும்?. இருந்தாலும் ஒவ்வொன்றாக செய்வார். 40 ஆண்டுகள் ஆண்டவர்கள் செய்யாததை செய்து கொண்டிருக்கிறார். பாராட்டுவோம், ஊக்குவிப்போம்.
பழைய போஸ்டாபீஸ் பகுதியில் பைக் ஓட்டிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்
Deleteஏழைகளின் நிலைமை உணர்ந்து வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சேர்மன் அவர்களே!
ReplyDeleteதொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteதொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteசேர்மனின் சேவை திருப்தி அளிக்கிறது
ReplyDeleteதொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteதொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDelete