.

Pages

Wednesday, December 27, 2017

சவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரியால் உதவித்தொகை வரவு!

அதிரை நியூஸ்: டிச.27
சவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரியால் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது

கடந்த சுமார் 3 ஆண்டுகளாக 15 லட்சம் நம்முடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என கனவை மட்டுமே கண்டுகொண்டிருக்கும் நம் இந்தியர்களால் மட்டுமே 'வெற்று வாக்குறுதிகளுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டை' இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

சவுதியில் குடிமக்கள் கணக்குத் திட்டம் (Citizen's Accounts Program) என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 700,000 பேருக்கு தலா 1,000 ரியால்கள் வீட்டுத்தேவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகைகள் வரவு வைக்கப்பட்டன.

மேலும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை பதிவு செய்திருந்த, சுமார் 2 பில்லியன் ரியால்கள் வீட்டுத்தேவைகளுக்கான உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுமார் 3.7 மில்லியன் குடும்பங்களின் சூழலுக்கு ஏற்றவாறு 300 ரியால்கள் முதல் 936 ரியால்கள் வரை பிரித்து வரவு வைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 10.3 மில்லியன் சவுதி மக்கள் உதவித்தொகை வேண்டி பதிவு செய்துள்ளனர்.

ஓவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி அன்று இந்த உதவித்தொகைகள் தொடர்ந்து மாதந்தோறும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த உதவித்தொகைகளை கொண்டு வீட்டுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், சவுதியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்வரி போன்ற வரிகளை கட்டவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என சவுதி தொழிலாளர் நல அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த உதவித்தொகைகள் விண்ணப்பித்துள்ள குடும்பதாரர்களின் வருமானம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவித்தொகையின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் இந்த உதவித்தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஆய்வு செய்வர்.

இத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டபோது, 6 பேர் கொண்ட குடும்பத்தினர் சுமார் 12,000 ரியால்களை மாத வருமானமாக பெற்றால் அக்குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,200 ரியால்கள் தருவதற்கும், அதே 6 பேர் கொண்ட குடும்பத்தின் வருமானம் 15,299 ரியால்களாக இருந்தால் 1,000 திர்ஹம் வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சாமா (SAMA) எனப்படும் சவுதி அரேபியன் மானிட்டரி ஏஜென்ஸி (Saudi Arabian Monetary Agency) எனும் சவுதியின் ரிசர்வ் வங்கி, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தாமல் முறையாக சம்பந்தப்பட்ட பயனாளர்களின் வங்கிக்கணக்குகளிலேயே இட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.