.

Pages

Thursday, December 21, 2017

தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 பேர் இறப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (21.12.2017) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
கண்டியூர் கிராமத்தில் தஞ்சாவூர் - அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH-226E) செல்லும் சுற்றுக்குளக்கரை பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது.  இவ்விடத்தில் சாலையை இரண்டாக பிரித்து நடுவில் சென்டர் மீடியன்; அமைக்க தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளரிடம்  அறிவுறுத்தினார்.

செங்கிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை 67 அமைந்துள்ள பகுதிகளில் பூதலூர் பிரிவு சாலை, வளம்பக்குடி பிரிவு சாலை, புதுக்குடி பிரிவு சாலை ஆகிய இடங்களில் சாலையில் மாடுகள் திடீரென்று சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன.  மேலும் சாலையை பொது மக்கள் கடக்கும் போதும்  அதிகவேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும், பொருள் சேதங்களும் ஏற்படுகின்றன.  தேசிய நெடுஞ்சாலையில் ஒயிட் மார்க்கர், மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், திட்ட இயக்குநரிடம் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் - பூதலூர் நெடுஞ்சாலை மற்றும் செங்கிப்பட்டி – திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் பொது மக்கள் அதிக அளவில் சாலையை கடந்து செல்லும் சமயங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன.  எனவே ஆவாரம்பட்டி பிரிவு சாலை, பாரா முனீஸ்வரர் கோயில், சஞ்சீவபுரம் பேருந்து நிறுத்தம், பூதலூர் நான்கு ரோடு. மற்றும் சித்திரக்குடி மெயின் ரோடு ஆகிய இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகையும், வேகத்தடை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் அறிவுறுத்தினார்.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக சாலையில் அங்காங்கே பள்ளம் விழுந்துள்ள இடங்களில் சீர் செய்ய தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளரிடம் அறிவுறுத்தினார்.

கும்பகோணம்; உட்கோட்டத்தில் அடிக்கடி சாலை விபத்து நடைபெறும் இடங்களை கண்டறியப்பட்டுள்ள கோவிலஞ்சேரி, திருவலஞ்சுழி பகுதிகளில் மிளிரும் பலகை, மிளிரும் வேகத்தடை வண்ணக்கோடுகள் அமைத்திட தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளரிடம் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சாலை விபத்தில் 432  இறந்துள்ளார்கள். இந்த ஆண்டு 23,000 நபர்கள் குடிபோதையில் வாகனம்  ஓட்டிய காரணத்தால்  காவல் துறையினர் 23,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நவம்பர் 2017ம் மாதத்தில் தஞ்சாவூரில் 65 சாலை விபத்துக்களும், பட்டுக்கோட்டையில் 45 சாலை விபத்துக்களும்,  கும்பகோணத்தில் 31 சாலை விபத்துகளும்  என நவம்பர் மாதத்தில் 141 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 14 நபர்கள் இறந்துள்ளனர்.

நேர் சாலை உள்ள சாலைகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், பள்ளி, கல்லூரிகள் உள்ள சாலைகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், வீடுகள் உள்ள  பகுதிகள் மக்கள் வசிக்கும் இடங்களில்  40 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனத்தை சீராக இயக்க வேண்டும்.  இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.  தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நான்கு  (CAR) சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும்.  நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் குடி போதையில் வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார்,  வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) அனைத்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளின் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய  துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.