அதிரை நியூஸ்: டிச.20
சவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் தீப்பற்றியதால் மரணம் அடைந்தார்.
சவுதி அரேபியா, அல் மஹத் கவர்னரேட் (Al Mahd governorate) பகுதியைச் சேர்ந்த புது மணப்பெண் ஒருவர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு உறவினர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றியதால் அவரும் அவருடனிருந்த மற்றொருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் இருவர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய புள்ளி விபரத்தின்படி, சவுதியில் நடைபெறும் துர் மரணங்களில் பெரும்பாலனவை சாலை விபத்துக்கள் மூலமே ஏற்படுகின்றன என்றும் சராசரியாக மணிக்கு ஒருவர் என உயிரிழப்பதாகவும், சவுதியில் ஆண்டுக்கு சுமார் 460,000 வாகன விபத்துக்கள் நேர்வதாகவும் தெரிய வந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சமார் 7,000 பேர் சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் சுமார் 9,000 பேர் மரணமடைந்துள்ளனர். இது சவுதியில் நிகழ்ந்த ஒட்டுமொத்த மரணத்தில் சுமார் 12 சதவிகிதமாகும். இது 2007 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் சாலை விபத்து மரணங்களிலேயே மிக அதிகமான சதவிகிதமாகும்.
Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.