.

Pages

Sunday, December 24, 2017

பட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி (படங்கள்)

பட்டுக்கோட்டை: டிச.24
பட்டுக்கோட்டையில் உடல் நலம் காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சிங்கப்பூர் வாழ் பட்டுக்கோட்டை பகுதி மக்கள், பல்வேறு சேவை அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன் தலைமை வகித்தார். டிஎஸ்பி வி.செங்கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ சி.வி.சேகர் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், ரோட்டரி, லயன்ஸ், ஜேசிஸ், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வங்கியாளர்கள் சங்கத்தினர், விதைகள் அமைப்பினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், நடைப் பயிற்சியாளர்கள் மன்றத்தினர், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தினர், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ஏனாதி ராஜப்பா கல்லூரி, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பெரிய தெருவிலுள்ள அரசு பிளாசா வணிக வளாகம் அருகே நிறைவடைந்தது.
தொடர்ந்து, அங்கு மருத்துவர் டி.ஏ.கே.ரெத்தினம் தலைமையில் உடல் நலம் காத்தல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் கே.பிரகாஷ் சர்க்கரைநோய் பற்றியும், எஸ்.ரவிசங்கர் இருதய நோய் பற்றியும், டி.மதிமாறன் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் வியாதிகள் பற்றியும், வி.செந்தமிழ்ச்செல்வன் மதுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விளக்கிப் பேசினர். பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் வரவேற்றார். சிங்கப்பூர் பொறியாளர் ஆர்.புகழேந்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பட்டுக்கோட்டை நடைப் பயிற்சியாளர்கள் மன்ற இணைச் செயலர் டி.ரவிச்சந்தர் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.