அதிரை நியூஸ்: டிச.25
ஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ஒட்டுபவர்கள் மீது 500 திர்ஹம் அபராதம்
ஷார்ஜா கார் பார்க்கிங் மீட்டர்கள் மீது ஸ்டிக்கர், நோட்டீஸ் ஒட்டுபவர்கள் கிறுக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது 500 திர்ஹம் அபராதத்துடன் பராமரிப்பு கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் பார்க்கிங் இன்ஸ்பெக்டர்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஷார்ஜா மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட நபர்களும் சில நிறுவனங்களும் பார்க்கிங் மீட்டர்கள், சுவர்கள், போன் பூத்துக்கள், பஸ் நிறுத்தங்கள், ரவுண்டபோட்கள், பெட்டிக்கடைகள் (Groceries), சூப்பர் மார்க்கெட்கள் என எங்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது, நோட்டீஸ் ஒட்டுவது, படம் வரைவது, பெயர்களை கிறுக்கிச் செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களால் சாதனங்கள் கேடாவதுடன் நகரின் அழகும் கெடுகிறது.
இவர்களை பிடிக்க 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரமாக்கப்படுவதுடன் அந்தந்த பொருட்கள் மீதான பராமரிப்பு கட்டணம் (Maintenance charge), தொழிலாளர் கூலி (Labour charge for removal) போன்ற கூடுதல் செலவுத்தொகையுடன் 500 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படுவதுடன் கம்பி எண்ணவும் நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.