இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு சட்டம் மற்றும் வார்டுகள் மறுவரையறை ஆணைய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளின்படி 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் தயார் செய்யப்பட்ட வார்டுகள் மறுவரையறை கருத்துருவுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு மறுவரையறை மீது கருத்துகள் தெரிவிக்க விரும்வோர் தொடர்புடைய பேரூராட்சியின் வார்டு மறுவரையறை அலுவலர் அல்லது செயல் அலுவலர் அல்லது மாவட்ட மறுவரையறை அலுவலர் அல்லது எனக்கு (மாவட்ட ஆட்சியர்) எழுத்து பூர்வமாக ஜன. 2-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.
இது நல்ல வாய்ப்பு. ஆர்வலர்களும் பொதுநல விரும்பிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம்மூரில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை - வார்டுகள் பிரிப்பு, பொருத்தமற்ற பெயர்களைத் தெருக்களுக்கு வைத்திருப்பது போன்றவற்றைப் பற்றிப் பேசலாம்.
ReplyDelete