.

Pages

Friday, December 29, 2017

எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் தன்னார்வல இளைஞர்கள் முகமது  நியாஸ், முஹம்மது, இப்ராஹிம்ஷா, அல் அமீன், நியாஸ் கான், ஆரீப் அகமது, அசாருதீன், முகமது கனி, நசீர் அகமது, பாவா பகுருதீன், அபூதாஹிர், அப்துல் ரஹ்மான், சாகுல்ஹமீது, கமாலுதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து, இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் வடிகால் வசதி, பழுதடைந்த  சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை வசதி, பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை, இப்பகுதி பொதுமக்கள் கடந்துசெல்ல புதிதாக நடைபாலம் ஆகிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து செய்துதர வலியுறுத்தி மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட பகுதிகளை தான் நேரில் ஆய்வு செய்து, கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார். அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை அம்மா பேரவை இணைச்செயலர் ஆதிராஜாராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.