பட்டுக்கோட்டை, டிச.25
காரைக்குடி-திருவாரூர் இடையே 149 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தது. இந்த வழித்தடத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் இருந்தன. 1902-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி இந்த வழித்தடத்தில் முதன் முதலாக ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரெயில் பாதைகள் அகல ரெயில் பாதைகளாக மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. இதையொட்டி திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.1,400 மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 74 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரெயில் பாதை அமைக்கவும், ரெயில் நிலையங்களை மேம்படுத்தவும், பாலங்கள் கட்டவும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு பணிகள் தொடங்கின.
பட்டுக்கோட்டை-பேராவூரணி, பேராவூரணி- ஆயிங்குடி, ஆயிங்குடி-அறந்தாங்கி, அறந்தாங்கி- காரைக்குடி என 4 பிரிவுகளாக அகல ரெயில் பாதை பணிகள் நடந்தன. இந்த பாதையில் 14 பெரிய பாலங்கள், 168 சிறிய பாலங்கள், 35 லெவல் கிராசிங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
தற்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்தும் தண்டவாளங்களின் இணைப்பு குறித்தும் அதிநவீன வசதிகள் கொண்ட என்ஜின் மூலம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அகல ரெயில் பாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே விரைவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டன. முன்னதாக மீட்டர் கேஜ் பாதையில் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 2 பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டன. இதை விட கூடுதலாக ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணிகள் முழுமை அடைந்தவுடன் ரெயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். வருகிற பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'அதிரை நியூஸ்' வாசகர் அஜீம் நமக்கு எடுத்தனுப்பிய பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றத்தின் படங்கள்...

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.