அதிரை நியூஸ்: டிச.24
நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதித்தது.
நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய விமான ரகங்களிலேயே உலகின் பெரிய விமானம் ஒன்றை சொந்தமாக தயாரித்து சீனா வெற்றிகரமாக சோதித்தது (China's domestically developed AG600, the world's largest amphibious aircraft). இந்த சோதனையோட்ட வெற்றி அதன் ராணுவ கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AG600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் தென் சீன பிரதேசமான குவாங்டோங் மாகாணத்தின் ஜூஹாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த நீர் நில விமானம் (amphibious aircraft) தென் சீனக் கடலில் வெற்றிகரமாக இறங்கியது. தென் சீனக் கடல் யாருக்குச் சொந்தம் என சீனாவுடன் பிலிப்பைன்ஸ், ஜப்பான், மலேஷியா, புருணை, தைவான், இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் மல்லுக்கட்டி வரும் நிலையிலும், வட கொரியாவைச் சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும் இச்சோதனை ஓட்ட வெற்றி ராணுவ முக்கியத்துவம் பெறுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நீர் நில விமானத்தில் (amphibious aircraft) அவசரகாலம் மற்றும் கடல் தேடுதல் பணிகளின் போது 50 பேர் வரை பயணம் செய்யலாம். 12 மெட்ரிக் டன் எடையளவு நீரை எடுத்துச் சென்று 20 நொடிகளில் காட்டுத்தீயின் மீது ஊற்ற முடியும். சுமார் 53.5 டன் எடையுடன் 4,500 கி.மீ (2,800 மைல்) இடை நிற்காமல் பறக்கக்கூடியது.
சீன அரசுக்குச் சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனத்தால் கடந்த 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த விமானம் போயிங் 737 விமானத்தை போன்ற அளவுள்ளது. இந்த வருடம் ஆரம்பத்தில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது ஆண்டின் கடைசியில் சோனை செய்யப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.