.

Pages

Saturday, December 23, 2017

அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ முன்பதிவு முகாம்!

அதிராம்பட்டினம், டிச.23
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பிரச்சாரமான ( Healthy people Healthy Nation ) 'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் 30-12-2017 சனிக்கிழமை தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக மீண்டும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற உள்ளது.

இதையொட்டி, போட்டியாளர்களுக்கான முன்பதிவு முகாம், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து ஜூம்மா பள்ளிவாசல்கள் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ள தங்களது பெயரினை ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இதில், மொத்தம் 500 போட்டியாளர்கள் என்ற இலக்குடன் நடைபெற்று வரும் முகாம்களில், 300 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மல்லிபட்டினம், புதுப்பட்டினம், மரக்காவலசை, சேதுபாபா சத்திரம், பேராவூரணி ஆகிய பகுதிகளிலும் முன்பதிவு முகாம்கள் நடைபெற்றது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.