சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகர் கொட்ல விஜயபாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டரங்கில் கடந்த டிச 22, 23, 24, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், நார்வே, குவைத் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இதில் கட்டா குமிட்டே பிரிவு போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் ஜே.அமிர்தத் மணிசங்கர் (உடையநாடு இராஜராஜன் பள்ளி மாணவர்) இரண்டு தங்கப்பதக்கம் ,
எஸ்.அகிலன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், ஜி.ஈஸ்வரன் ஒரு தங்கம் , எஸ்.ஷாலினி ஒரு வெண்கலம் ( மூவரும் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்) ஆகியவற்றை வென்றனர். மேலும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியன் சிறப்பு பயிற்சி பெற்றதற்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலைமைப் பயிற்சியாளர் வேய்ன் மெக் டோன்லா பாராட்டி சான்றளித்து கௌரவித்தார்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியனை கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கொன்றை எஸ்.கே.இராமமூர்த்தி மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.