.

Pages

Thursday, December 28, 2017

வரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறினர்

அதிரை நியூஸ்: டிச.28
குடும்பத்தினர் மீதான தீர்வை வரியால் சவுதியிலிருந்து 62,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறினர்

சவுதி அரேபியாவில் 'வேலைவாய்ப்பில் சவுதி மயப்படுத்தல்' எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு கெடுபிடிகள், வரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய வரிகளில் ஒன்றாக வெளிநாட்டு ஊழியர்களின் ஸ்பான்சரின் கீழ் தங்கியிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர் மீதும் மாதம் 100 ரியால் தீர்வை செலுத்த வேண்டும் (Levy on Expat Dependents) என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சுமார் 62,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் வேலைகளை துறந்து சவுதியிலிருந்து வெளியேறியுள்ளனர் என சவுதி புள்ளியியல் துறைக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்வை 2018 ஜனவரி முதல் 200 ரியால்களாக அதிகரிக்கவுள்ளதுடன் 2019ல் 300 ரியால்களாகவும், 2020ல் 400 ரியால்களாகவும் அதிகரிக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாட்டு ஊழியர்களின் வெளியேற்றம் 10.85 மில்லியனிலிருந்து 10.78 ஆக குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சவுதியர்களின் வேலைவாய்ப்பின்மை 2020 ஆம் ஆண்டில் 9 சதவீதமாகவும், 2030 ஆம் ஆண்டில் 7 சதவீதமாகவும் குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்குள் சவுதி அரேபியர்கள் வெளிநாட்டினர் வகித்த 1.2 மில்லியன் வேலைவாய்ப்புக்களை பெறுவர்.

2018 ஜனவரி முதல் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மீதான தீர்வை வரி 300 ரியால்களிலிருந்து 400 ரியால்கள் வரை வசூலிக்கப்படவுள்ளது. அதாவது,

சவுதி அரேபிய ஊழியர்களை விட அதிக வெளிநாட்டு ஊழியர்களை (Foreigners more than Saudi Arabians) கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் 2019ல் 600 ரியால்களும், 2020ல் 800 ரியால்களையும் செலுத்த வேண்டும்.

அதேவேளை சவுதி அரேபிய ஊழியர்களை விட குறைவான வெளிநாட்டு ஊழியர்களை (Foreigners less than Saudi Arabians) கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் 2018ல் 300 ரியால்களை செலுத்த வேண்டும் இதுவே வருடந்தோறும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு 700 ரியால்களாக உயரும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.