.

Pages

Wednesday, December 27, 2017

பட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து விஏஓக்கள் போராட்டம் !

பட்டுக்கோட்டை, டிச.27
பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 24 மடிக்கணினிகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில அடங்கல் சான்று உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென சான்றிதழ் வழங்கும் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து பராமரிப்புத் தொகை அரசால் வழங்கப்படாததைக் கண்டித்து, பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாக அலுவலர்கள் 50 பேர் இன்று புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய 24 மடிக்கணினிகளை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரகுராமனிடம் திரும்ப ஒப்படைத்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.