தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.12.2017) புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி விரைவாக தீர்வு காணப்படும். அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்த மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் பங்கு பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று வேலை வாய்ப்புகளில் 4 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பெரும்பாலும் 4 சதவிகிதம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி அரசு வேலை வாய்ப்பு பெற்று பயன் பெற வேண்டும். அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான கையெடுகள் எளிதாக கிடைக்கின்றது.
நமது மாவட்டத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு செயற்கை கால் பெற்று பயன் பெறலாம். இது தவிர ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல் அரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களின் குறைகள் மனுக்களாக பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான அமர்வு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும், தஞ்சாவூர் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த வில்லியம் மற்றும் சசிகுமார் ஆகியோர் மாநில மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் அ.பஹாத் அகமது கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்பர் அலி, புதுப்பட்டினம் ஜமால் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.