.

Pages

Wednesday, December 20, 2017

இன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்! துபை சபாரி பார்க் இலவச அனுமதி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது!!

அதிரை நியூஸ்: டிச.20
துபையில் அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக துவக்கப்படவுள்ள துபை சபாரி எனும் இயற்கை சூழல் வனவுயிரின காட்சிசாலை வெள்ளோட்டமாக 15 நாட்களுக்கு அதாவது எதிர்வரும் டிசம்பர் 26 வரை இலசவமாக அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமென புகுந்து கண்டுகளித்தனர்.

கட்டுக்கடங்கா மக்கள் கூட்டத்தால் பூங்கா திணறியதால் குடும்பத்தினர்களுக்கு மட்டும் என சிறப்பு நாள் ஒதுங்கி இலவச அனுமதியும் வழங்கப்பட்டது. மேலும் துபையில் நிலவும் குளிர், மழையால் பூங்கா அனுமதி அவ்வப்போது மறுக்கப்பட்டும் வந்தது. நேற்று கூட துபையில் மழை மேகம் காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பூங்கா விரைவாக அடைக்கப்பட்டது.

இந்நிலையில், துபை இயற்கை சூழல் வனவுயிரின பூங்காவிற்கான இலவச அனுமதி இன்றுடன் கடைசி என்றும் நாளை முதல் (21.12.2017) கட்டணம் என்றும் அதிரடியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குடும்பத்தினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதால் பேச்சுலர்ஸ் யாரும் சென்று ஏமாற வேண்டாம்.

அரேபியன், ஆசியன் மற்றும் ஆப்பிக்க வில்லேஜ் பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம்: 
பெரியவர்கள் 50 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 30 திர்ஹம்

துபை சபாரி வில்லேஜ் பகுதிகளுக்கு செல்ல தனி நுழைவு கட்டணம்:
பெரியவர்கள் 50 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 20 திர்ஹம்

அரேபியன், ஆசியன் மற்றும் ஆப்பிக்க வில்லேஜ் மற்றும் துபை சபாரி வில்லேஜ் ஆகிய 4 இணைந்த பகுதிகளையும் பார்வையிட நுழைவு கட்டணம்:
பெரியவர்கள் 85 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 30 திர்ஹம்

3 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு எப்போதும் இலவசம்

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.