.

Pages

Tuesday, December 19, 2017

தஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி ~ விண்ணப்பிக்க அழைப்பு!

File Image
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு
மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (டிச.19) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ), மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொழில் அபிவிருத்தி கழகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்துடன் (DIC) இணைந்து 2 வார கால தொழில் நுட்ப தொழில் முனைவோர் பயிற்சி (Technology Based Entrepreneurship Development Programme) 2017 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொழில் செய்ய விரும்புபவர்கள் 18 முதல் 35 வயதிற்க்குட்பட்ட இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc., Degree ), டிப்ளமோ (Diploma) மற்றும் இன்ஜினியரிங் (BE) முடித்த ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியில் தொழிலுக்குரிய வாய்ப்புகள், வங்கி கடன் உதவி, மத்திய, மாநில அரசு மானிய உதவிகள், தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், ஏற்றுமதி / இறக்குமதி பற்றி அந்தந்த துறையில் உள்ள வல்லுநர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் தங்கள் தொழிலில் வெற்றிபெற இலக்கு நிர்ணயித்தல், தகவல் பரிமாற்றம் போன்ற திறன்மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.

1. பயிற்சி பெற்றவர்கள் தொழில் தொடங்கும் வரை அவர்களை கண்காணித்து வேண்டிய உதவிகள் செய்யப்பட உள்ளது.

2. "ஏற்றுமதி/இறக்குமதி" செய்வது பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

3. சிறு மற்றும் குறுந்தொழில் புரிவோர்க்கான சான்றிதழ்கள் பெற்றுத் தரப்பட உள்ளது.

4. விருப்பமுள்ளவர்களுக்கு சணல்பொருட்கள் தயாரித்தல் செய்முறைப்பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நேரில் கீழ்க்கண்ட முகவரிக்கு 2 கலர்போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் நகழுடன் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  முதலில் வரும் 25 நபர்களுக்கு வாய்ப்பு உறுதியாகும்.

முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 
பொது மேலாளர் அலுவலகம்,
மாவட்ட தொழில் மையம் (DIC),
45/1-13, நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் - 613006. -- தொலைபேசி எண். 04362-255318

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.