அதிராம்பட்டினம், டிச.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அதன் பிரதிநிதிகள், அந்நிறுவன உரிமையாளர் பாலு அவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து நுகர்வோரின் புகாரை தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்க பிரதிநிதிகள் கூறியது;
பாலு இன்டேன் காஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நுகர்வோர் பில் தொகைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. பில் தொகை மட்டும் வழங்கினால் போதுமானது என காஸ் நிறுவன உரிமையாளர் பாலு கூறியதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.