தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்டின் கீழ் இயங்கிவரும், காதிர் முகைதீன் கல்லூரியில் உத்தம திருநபியின் உதய தினவிழா புதன்கிழமை காலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு, எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக, காயல்பட்டினம் மஹ்லரா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி, அல்ஹாபிழ் எஸ். ஸெய்யிது அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டு மீலாது விழா சிறப்புரை ஆற்றினார்.
விழா முடிவில், கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் நன்றி கூறினார். இதில், சென்னை உயர்நீதிமன்ற ஒய்வுபெற்ற வழக்குரைஞர், முன்னாள் வஃக்ப் வாரியத் தலைவர் ஏ.ஜே அப்துல் ரெஜாக், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே முகம்மது அஸ்லம், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Good News Item!
ReplyDelete