அதிராம்பட்டினம், டிச.18
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை 3 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. ரயில்கள் நின்று செல்வதற்காக நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. ரயில்நிலைய நடைமேடை ஏறக்குறைய 10 அடி உயரத்தில் கட்டப்படுகிறது.
அதேபோல், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. முதலில் 10 அறைகளுக்கான கட்டுமானப்பணி நடந்தது. இதில், பயணிகள் டிக்கெட் கூடம் அமைய உள்ளது. தற்போது, அதன் அருகே கூடுதலாக 7 அறைகளுக்கான பில்லர்கள் எழுப்பப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுஒரு புறமிருக்க, பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையே உள்ள ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிராம்பட்டினம் பகுதி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.