.

Pages

Thursday, December 21, 2017

கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (21.12.2017) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் இயங்கும் பதிவு செய்யப்படாத கண்ணாடி நாரிழை படகுகளை உடனடியாக மீன் வளத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

வானிலை குறித்த தகவல்கள், புயல் மற்றும் சுனாமி ஆகியவகைள்  முன்னதாகவே அனைத்து மீனவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். 

கடலுக்குச் செல்லும் மீன்படகு ஒவ்வொன்றிற்கும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஜி.பி.எஸ். கருவிகளை அரசு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது மீன்வளத்துறையிடம் பதிவு செய்ய வேண்டும்.

பேரிடர்வு ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அங்காடிகளிலும் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பால் பவுடர் மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் மற்றும் மாற்றுத் துணிகள் தேவையான அளவு இருப்பில் வைக்க வேண்டும். 5 கிராமங்களில் ஓரிடத்தில் மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

நமது மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மீனவ கிராமங்களில் கடலோரப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் முகமாக மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளை வைத்து ஒவ்வொரு மாதம் ஏதாவது ஒரு மீன கிராமத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, மீனவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) அனைத்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளின் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.