.

Pages

Wednesday, December 20, 2017

பட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.20
கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் கே.மகரஜோதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். செல்லத்துரை, பட்டுக்கோட்டை வட்டச் செயலர் பி. ஆனந்தஜோதி, பொருளாளர் கே. நாக மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்ட மாறுதல்கள் உடனடியாக வழங்க வேண்டும், கூடுதலாக பொறுப்பு ஏற்கும் கிராமங்களுக்கு பொறுப்புப்படி உடனடியாக வழங்க வேண்டும், உட்பிரிவு இன பட்டா மாறுதல், வி.ஏ.ஓ  பரிந்துரை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும், இணையவழிச் சான்றுகளுக்கு உரிய படியினை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகள் குறித்து மாநில வி.ஏ.ஓ க்கள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், மாவட்ட வாரியாக பேச்சுவார்த்தை நடத்த சொன்ன வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து முழக்கமிட்டனர். இதில், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.