.

Pages

Thursday, December 21, 2017

தொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் பெண்களுக்கான கிராமிய – சுற்றுலா தொழில் முனைவு மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய 5 நாள் பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Enterprenurship Development and Innovation Institute) மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மற்றும் அருகில் உள்ள இடங்களில் தொழில் புரியும் பெண்களுக்கு அவர்கள் ஈடுபடும் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு பயிற்சிகள் வழங்கும் விதமாக 22 நபர்கள் தேர்வு செய்து பல்வேறு தலைப்புகளில் தொழில் நுட்பங்கள் பிற துறை வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், வங்கி இணைப்புகள், தொழில் சார்ந்த கடன்கள், மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரித்தல், தொழில் மானியங்கள் மற்றும் பெண்களுக்கான சமூக பொறுப்புகள், சமூக பாதுகாப்புகள், பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் அணுகுமுறைகள், பாலின பாகுபாடுகள் போன்றவைகள் அந்த துறை சிறப்பு  வல்லுநர்களை கொண்டு பயிற்சி மற்றும் குழு விவாதங்களுடன் நடத்தப்பட்டன.

மேலும் இயற்கை உணவு வகைகள் சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், மற்றும் பல வகையான உணவு வகைகள் பற்றியும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள்; வழங்கப்பட்டன.

பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 22 பெண்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது;
சிறு தொழில் முனைவோர் வணிக ரீதியாக தன்னம்பிக்கையுடன் தொழில் செய்வது பற்றி இப்பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக அமைகின்றது. பொதுவாக கிராமப்புற பெண்களிடம் வரவு செலவு செய்வது குறித்த அனுபவ அறிவு உண்டு, அதே போல் பெண்கள் தொழில் ரீதியாக அதை பயன்படுத்தும் போது வரவு செலவுகளை மேற்கொள்வது குறித்தும், வங்கிகளை அணுகி கடன் பெறுவது குறித்தும், அதை முறையாக திருப்பி செலுத்துவது குறித்தும் இப்பயிற்சி முலம் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு தொழிலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் சிறப்பாக செய்யலாம். வாடிக்கையாளர்கள் நம்மை நாடி வர வேண்டும்.  தொடர்ச்சியாக நம்மிடம் பொருட்களை பெறுவது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பம் சார்ந்த நபர்களிடமும் நம்மை பற்றி கூறி பொருட்கள் வாங்க வரும் வகையில்  நமது அணுகு முறை இருக்குமேயானால் தொழில் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும்.

வியாபாரம் செய்யும் பொழுது தெளிவான தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதன் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியும். இப்பயிற்சியை பயன்படுத்தி நீங்கள் செய்யும் தொழில்களை சிறப்பான முறையில் விரிவுப்படுத்தி அதிக லாபம் ஈட்டி உங்கள் வாழ்க்கை சிறப்படைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், மாநில பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸ் வாஸ், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.