.

Pages

Monday, December 18, 2017

குவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத் தொகை ~ ஆட்சியர் வழங்கல்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (18.12.2017) திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து சுய தொழில் தொடங்க தஞ்சாவூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு ரூ.20,000த்திற்கான காசோலையினையும், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தைச் சோந்த (லேட்) அன்பரசன் சோமு என்பவர் குவைத் நாட்டில் பணியில் இருந்த போது இறந்தயொட்டி  சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை அவரது மனைவி புனிதா என்பவருக்கு ரூ.23,80,345க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வினோலீ இராமலிங்கம் இந்தியாவின் சார்பாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இரும்பு மனிதர் Triathlon 3.8 கி.மீ.நீச்சல், 180 கிமீ. சைக்கிள் 42 கி.மீ. ஒட்டம் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர்களின் முதலிடம் பெற்றுள்ளார். கேடயம் மற்றும் மெடல் பெற்றதை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கௌரவித்தார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் சார்பில் 24 மணி நேரம் 104 மருத்துவ உதவி சேவை 4ம் ஆண்டு தொடக்கத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே 104 மருத்துவ சேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொது மக்களுக்கு வழங்கினார். இச்சேவையின் மூலம் மருத்துவ தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த புகார்களை பொது மக்கள் 104 கட்டணமில்லா தொலைபேசி பயன்படுத்தி தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.