.

Pages

Sunday, December 24, 2017

எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்திய ஜெட் ஏர்வேஸ்!

அதிரை நியூஸ்: டிச. 24
எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்திய ஜெட் ஏர்வேஸ்

கோவாவில் இருந்து அபுதாபிக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை இங்கு நிலவிய கடும் பனிமூட்டத்தை அடுத்து அருகிலுள்ள அல் அய்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விட்டனர். அல் அய்னில் விமானம் தரையிறங்கினாலும் பயணிகளை தரையிறங்க விடவில்லை உடல் சுகவீனமுற்ற இமராத்தி பெண் பயணியும் அவருடன் வந்த குடும்பத்தினரையும் தவிர, அவர்கள் கூட 4 மணிநேர காத்திருப்புக்கு பின் தான் அனுமதிக்கப்பட்டார்.

அல் அய்னில் இரவில் இமிக்கிரேசன் ஊழியர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்பதால் மீண்டும் கோவாவுக்கு சென்று பின் மாற்று விமானத்தில் அனைத்து பயணிகளும் அழைத்து வரப்படுவர் என முதலில் குண்டைத் தூக்கிப் போட்டனர் விமான ஊழியர்கள் ஆனால் 24 மணிநேரமும் இமிக்கிரேசன் ஊழியர் பணியாற்றுவது அல் அய்ன் விமான நிலைய நிர்வாகத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

மேலும் அல் அய்ன் விமான நிலைய நிர்வாகம் விமானத்தை ஷார்ஜா அல்லது துபையில் தரையிறக்க உதவ முன்வந்தனர் என்றாலும் அங்கும் விமான போக்குவரத்தில் சிக்கல் நீடித்ததால் இயலவில்லை. இதற்கிடையில் விமான ஊழியர்களின் பணிநேரம் முடிவடைந்ததால் மீண்டும் கோவாவுக்கு விமானத்தை கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்ததால் பயணிகள் ரகளை ஈடுபட துவங்கினார்.

பயணிகள் இந்த விமான ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை கொண்டு விமானத்தை இயக்குமாறு கோரியதை அடுத்து விமானத்தில் தரையிறங்குவதற்குரிய ஒரு சாதனம் காணாமல் போய்விட்டதாக கதையளந்துள்ளனர். அல் அய்ன் விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணம் தராமல் செல்ல விரும்புவதால் அல்லது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கு இடையில் நிலவும் நிதிப் பிரச்சனையாலேயே ஊழியர்கள் கடமையை செய்ய மறுப்பதாகவும் பயணிகளால் குற்றம் சாட்டப்பட்டது.

இறுதியாக, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தின் தலையீட்டிற்குப் பின் 11 மணிநேர தாமதத்திற்குப் பின் மீண்டும் அல் அய்னிலிருந்து அபுதாபிக்கு விமான புறப்பட்டதையடுத்து மனநிம்மதி இழந்து ரகளையில் ஈடுபட்ட பயணிகள் அனைவரும் அமைதியாயினர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.