அதிரை நியூஸ்: டிச.24
துபையில் அடுத்த வாரம் சுற்றுலா முக்கியத்துவமிக்க ஃபிரேம் பில்டிங் திறக்கப்படுகிறது.
துபையில் சுற்றுலா ஈர்ப்பின் இன்னொரு முக்கிய அம்சமாக கட்டப்பட்டு வந்த போட்டோ சட்டகம் வடிவிலான Frame Building அல்லது Berwaz Dubai என அழைக்கப்படுகின்ற ஃபிரேம் பில்டிங் திறக்கப்படுகிறது என்றாலும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை.
அடுத்த வாரம் இந்த ஃபிரேம் பில்டிங் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட அடுத்த நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என துபை மாநகராட்சியின் முதன்மை இயக்குனர் ஹூஸைன் நாஸர் லூத்தா அவர்கள் தெரிவித்தார்.
துபை சபாரி பார்க் போன்று இலவச அனுமதி ஏதும் கிடையாது என்றும் பெரியவர்களுக்கு 50 திர்ஹமும் குழந்தைகளுக்கு 30 திர்ஹமும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் விளக்கப்படுத்தினார்.
இந்த இரட்டை கோபுர ஃபிரேம் பில்டிங் 150 மீட்டர் உயரத்திற்கு நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மேல் தளத்தின் ஒரு பகுதி கண்ணாடி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. (Dubai Frame, the iconic twin tower project with a 150-metre-high glass bridge observation deck will open next week)
இந்த கோபுரத்தின் உச்சிக்கு செல்வதன் மூலம் துபை மாநகரின் முழுஅமைப்பையும் 360 டிகிரி கோணத்தில் ரசிக்க இயலும்.
இதற்கான நுழைவுச் சீட்டுக்களை இணைய தளம் வழியாகவும், ஃபிரேம் பில்டிங் நுழைவாயிலில் உள்ள கவுண்டரிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பொதுமக்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுவர். ஆண்டுக்கு 2 மில்லியன் சுற்றுலாவாசிகள் இங்கு வருகை தருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிடத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள அழகிய நீரூற்றுக்கள் (Water Fountains), தரை தளத்தில் அருங்காட்சியகம் (Museum) ஆகியவற்றையும் பார்த்து ரசிக்க அனுமதிக்கப்படுவர். பழைய துபையின் கட்டுமானங்கள், நடைபெற்றுக் கொண்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் வானுயர்ந்து நிற்கும் நவீன கட்டுமானங்கள் என முக்காலத்தையும் (Past, Present & Future) முப்பரிமாண வடிவில் (3D) ரசிக்கலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.