.

Pages

Tuesday, December 26, 2017

பல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள்!

அதிரை நியூஸ்: டிச.26
பீஹாரில் ரயில் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய கிராமத்து சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள்.

பீஹார் மாநில தலைநகர் பட்னாவிலிருந்து சுமார் 260 கி.மீ தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளது மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமம் மங்கல்பூர். இங்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் பீம் யாதவ் என்ற 12 வயது சிறுவன் வழமைபோல் ரயில்வே டிராக் வழியாக ஒரு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தான்.

அப்போது அந்த ரயில்வே டிராக்கில் விரிசல் விழுந்து உடைந்துள்ளதையும் அதேவேளை ஒரு ரயில் ஒன்று வேகமாக வருவதை கவனித்த பீம், உடனடியாக தனது சிவப்புநிற சட்டையை கழட்டி சுழற்றியவாறு ரயிலை நோக்கி ஓடினான்.

சிறுவன் செந்நிற சட்டையுடன் ஓடிவருவதை கவனித்த ரயில் ஓட்டுனர் அவசரகால பிரேக்கை உபயோகித்து ரயிலை நிறுத்தியதால் பல நூறு உயிர்கள் நடைபெறவிருந்த பெரிய விபத்திலிருந்து தப்பின. இவ்வீரதீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் உட்பட.

இளம் ஹீரோ என வர்ணிக்கப்படும் பீம் யாதவின் தந்தை ஜனார்தன் யாதவ் ஒரு விவசாய கூலித்  தொழிலாளி தனது மகனுக்கு படிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்கு கூட மிகவும் சிரமப்படக்கூடியவர் ஆனால் சிறுவன் பீம் நன்கு படிக்கக்கூடியவன். தனக்கு கணக்கும், அறிவியலும் விருப்பப்பாடம் என தெரிவித்துள்ளான்.

"என் இளம் வயதில் ;செயற்கரிய செய்த சிறுவன்' என்ற தலைப்பில் கடல்நீர் ஊருக்குள் புகாமல் இரவு முழுவதும் தனது கையால் தடுப்புச் சுவற்றில் உள்ள துளையை அடைத்து காப்பாற்றியதாக ஒரு பாடம் படித்ததாக ஞாபகம், அதே ஞாபகம் உங்களில் யாருக்காவது இருக்கா?"

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.