அதிரை நியூஸ்: டிச.28
துபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க்கிங் மற்றும் பஸ், மெட்ரோ நேரங்கள் அறிவிப்பு.
துபையில் 2018 ஆங்கிலப் புத்தாண்டு எனும் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. எனவே, 2 தினங்களுக்கு பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை, அதாவது ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள்.
30.12.2017 டிசம்பர் நள்ளிரவு 11.59 மணிமுதல் ஜனவரி 2 காலை 7.59 வரை பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, பார்க்கிங் கட்டணம் இங்கு செலுத்த வேண்டும்.
துபை மெட்ரோ, ரெட் லைன்: 43 மணிநேரம் தொடர்ந்து இயங்கும்:
துபை மெட்ரோ ரயிலின் ரெட் லைன் சேவை டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணிமுதல் ஜனவரி 2 ஆம் தேதி துவங்கும் நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்து 43 மணி நேரத்திற்கு இயங்கும். ஜனவரி 2 ஆம் தேதி காலை முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும்.
துபை மெட்ரோ, கிரீன் லைன்:
துபை மெட்ரோ ரயிலின் ரெட் லைன் சேவை டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிமுதல் ஜனவரி 2 ஆம் தேதி துவங்கும் நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்து இயங்கும். ஜனவரி 2 ஆம் தேதி காலை முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும்.
துபை டிராம்:
துபை டிராம் சேவை டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 6 மணிமுதல் ஜனவரி 2 ஆம் தேதி துவங்கும் நள்ளிரவு 1 மணிவரை தொடர்ந்து இயங்கும். ஜனவரி 2 ஆம் தேதி காலை முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும்.
பஸ் நேரங்கள்:
மெட்ரோ லிங்க் பஸ்கள் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலீபா, அபூ ஹைல் மற்றும் எதிசலாத் நிலையங்களிலிருந்து அதிகாலை 5 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 2 மணிவரை (இரவு) இயங்கும்.
கோல்டு சூக் பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.25 மணிமுதல் அடுத்த நாள் நள்ளிரவு 00.29 (12.30) வரை இயங்கும்.
பர்துபை பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.16 மணிமுதல் அடுத்த நாள் நள்ளிரவு 1 மணிவரை இயங்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.