தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மாற்றுத்திறனாளிகள் உட்பட 3538 இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பெறும் உதவித்தொகை அளவானது தற்போது இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயனாளிகளது தகுதி மற்றும் விருப்பத்திற்குட்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் திறன் பயிற்சியானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் அளிக்கப்பட உள்ளது. இம் முகாமில் முன்னனி திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்நிறுவனங்களில், இலவச திறன் பயிற்சி பெறும்பொருட்டு, திறன் பயிற்சி முகாமானது 27.12.2017 தேதியில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, இம்முகாமில் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய நாளில் வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்ட விண்ணப்பப்படிவமும் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள வரும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் செராக்ஸ் நகல்கள் ஆகியவற்றை கொண்டு வரவும். எனவே, இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் மற்றும் இதர பதிவுதாரர்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.