அதிரை நியூஸ்: டிச.18
அமீரகத் தலைநகர் அபுதாபியில் பெட்ரோல், டீசலுக்குப் பதில் அழுத்தநிலை இயற்கை எரிவாயுவில் (Compressed natural gas - CNG) இயங்கும் வாகனங்களாக மாற்றப்படுவது அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்களின் முன்னொடியாக அபுதாபி அரசுத் துறை வாகனங்கள், டேக்ஸிக்கள், பொது போக்குவரத்திற்கான பஸ்கள் போன்றவை முன்னிலை வகிக்கின்றன. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்று வரை எமிரேட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சுமார் 6,000 வாகனங்கள் அழுத்தநிலை இயற்கை எரிவாயு (CNG Vehicles) வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அபுதாபியின் எமிரேட்ஸ் போக்குவரத்து நிறுவனம் வட அமீரக பகுதிகளான ஷார்ஜா, ராஸ் அல் கைமா, புஜைரா, அஜ்மான், உம்மல் குவைன் போன்ற எமிரேட்டுகளில் இயற்கை எரிவாயுவிற்கு வாகனங்களை மாற்றித் தரும் பணிகளை துவங்கியுள்ளது. மேலும், இதுவரை சுமார் 20 தனியார் வாகனங்களுக்கு எமிரேட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தால் இவ்வசதி செய்து தரப்பட்டுள்ளதுடன் அழுத்தநிலை இயற்கை எரிவாயுவிற்கு மாறும் தனியார் வாகனங்களால் சுமார் 40 சதவிகிதம் வரை செலவை மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அழுத்தநிலை இயற்கை எரிவாயுவின் விலை இன்று வரை விலை ஏறாமல் 1 கியூபிக் மீட்டர் 1.40 திர்ஹம் என்றிருக்கும் போது பெட்ரோல் லிட்டர் 2 திர்ஹத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. 4 சிலிண்டருடைய வாகனத்தின் எரிவாயு கொள்கலனை 18 திர்ஹத்திற்கு நிறைத்து சுமார் 250 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். அதேவேளை 18 திர்ஹத்திற்கு நிரப்பப்படும் சுமார் 9 லிட்டர் பெட்ரோலைக் கொண்டு 80 கி.மீ வரையே செலுத்த முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் 100 இத்தாலி மற்றும் ஜெர்மனியிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்படுவதால் இதுவரை டேங்க் வெடித்தல் போன்ற எத்தகைய குறைபாடுகளும் ஏற்படவேயில்லை. மேலும் வாகனம் இயங்கும் போது எரிவாயு தீர்ந்துவிட்டால் தானாகவே பெட்ரோலுக்கு மாறிக் கொள்ளும். அபுதாபி விமான நிலையத்தில் சேவையிலுள்ள மெர்ஸிடஸ் பென்ஸ் ரக டீசல் டேக்ஸிக்கள் அனைத்தும் தற்போது எரிவாயுவில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது 25 அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் (Adnoc petrol stations) எரிவாயு நிரப்பும் வசதிகள் உள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அட்னாக் பெட்ரோல் நிலையங்களும் குறைந்தது ஒரு எரிவாயு நிரப்பு மையத்தையாவது கொண்டிருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல்களை எரிவாயு வாகனங்களாக மாற்றித்தரும் மையங்கள் தற்போது அபுதாபி, ஷார்ஜா, துபை மற்றும் அல் அய்ன் நகரம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன. எதிர்வரும் மாதங்களில் அபுதாபியின் அல்கர்பியாவில் (Al Gharbia of Abu Dhabi Emirate) புதிதாக ஒரு மையம் திறக்கப்படவுள்ளது. ஒரு வாகனத்தை மாற்றித் தருவதற்கு வாகனத்தின் சிலிண்டர் மற்றும் தயாரிப்பு வருடத்தைப் பொறுத்து 3 முதல் 4 மணிநேரங்கள் மட்டுமே ஆகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.