அமெரிக்காவில் அதிகமான அதிரை பிரமுகர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில், சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் வல்லோஹோ நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் ஆகியவற்றை, அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின் நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார். கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலப் பணிகள் குறித்து பேசப்பட்டது.
முன்னதாக, அவ்வமைப்பின் துணைத் தலைவர் சலீம் வரவேற்றுப் பேசினார். கூட்ட முடிவில், துணைச் செயலாளர் அதிரை சித்தீக் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிராம்பட்டினம் பிரமுகர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
மாஷா அல்லாஹ் அனைத்து நல் உள்ளங் கலையும் இத்தலத்தில் பார்ப்பது மன நிறைவு தருகின்றது.
ReplyDeleteவாழ்துக்கள்