அதிரை நியூஸ்: டிச. 26
துபையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் 23வது 'துபை ஷாப்பிங் பெஸ்டிவல்' (Dubai Shopping Festival - DSF) எனப்படும் துபை விற்பனைத் திருவிழா இன்று முதல் பல்வேறு அதிரடி சலுகைகள், தள்ளுபடிகள், பரிசுத் திட்டங்களுடன் துவங்கி எதிர்வரும் 2018 ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
துபை ஷாப்பிங் பெஸ்டிவல் துவங்குவதையொட்டி இன்று ஒரு நாள் 12மணி நேர 90% வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாஜித் அல் புத்தைம் குழுமங்களின் ஏற்பாட்டில் மால் ஆப் த எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்திப், சிட்டி சென்டர் மெயாஸிம், சிட்டி சென்டர் ஷின்டாகா, சிட்டி சென்டர் அல் பர்ஸா ஆகிய வணிக வளாகங்களில் இன்று பகல் 12 மணி துவங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் 200 திர்ஹத்திற்கு பொருட்கள் வாங்குவோருக்கு பரிசுக் கூப்பன் தரப்பட்டு இன்று இரவே அது சிட்டி சென்டர் மிர்திப் வளாகத்தில் குலுக்கப்பட்டு 50,000 திர்ஹம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும் துபை மாநகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதுடன் பல்வேறு பல்வேறு வணிக மையங்களிலும் சிறப்பு கண்கவர் நிகழ்ச்சிகள், வீதி நிகழ்ச்சி, வழமையான வாண வேடிக்கைகளும் தினமும் இடம் பெறவுள்ளது.
அதேபோல் துபையிலுள்ள சுமார் 3,000 வணிக நிறுவனங்களும் பல்வேறு பணப்பரிசுகள், கார், வீட்டுத் தேவைப் பொருட்கள் என வழங்கவுள்ளன. மேலும் துபை ஷாப்பிங் பெஸ்டிவல் நடைபெறும் 33 நாட்களும் தினம் 1 கிலோ என 33 கிலோ தங்கமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இந்த தங்கக் குலுக்கலில் கலந்து கொள்ள, துபை ஷாப்பிங் பெஸ்டிவலில் பங்குபெற்றுள்ள ஜூவல்லரி கடைகளிலிருந்து குறைந்தது 500 திர்ஹத்திற்கு தங்க நகைகள் வாங்கினால் கூப்பன் ஒன்று தருவார்கள். அந்த கூப்பன்களின் மீது தினமும் குலுக்கல் நடத்தப்பட்டு முதல் பரிசாக 500 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக இருவருக்கு தலா 250 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
இது தவிர குளோபல் வில்லேஜில் தினசரி சிறப்பு நிகழ்ச்சிகள், வாரந்தோறும் குலுக்கப்படும் பரிசுகள், தினம் ஒரு இன்பினிட்டி கார் (Infiniti QX60) குலுக்கல், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள் என சர்வதேச சுற்றுலா பயணிகளை பெருமளவில் துபைக்கு ஈர்க்கும் திருவிழாவாக நடைபெறவுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.