அதிரை நியூஸ்: டிச.20
அமீரகத் தலைநகர் அபுதாபியில் பொது போக்குவரத்திற்கு பயன்படும் பஸ் பயணத்தையொட்டி பல்வேறு புதிய சட்டங்கள் மற்றும் நடப்பு விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இனி 10 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதியை செலுத்தினால் போதும் அதாவது 50% தள்ளுபடி சலுகை. 12 வயதிற்கு கீழள்ள குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் இன்றி பஸ்ஸில் தனியே பயணம் செய்ய அனுமதியில்லை.
பஸ்ஸிற்குள் சாப்பிட, குடிக்க, சூயிங் கம் மெல்ல, எச்சில் துப்ப மற்றும் புகையிலை பொருட்களை பாவிக்க அனுமதியில்லை. அதேபோல் சக பயணிகளுடன் சச்சரவு செய்யக்கூடாது குறிப்பாக தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது.
மேலும் கூரிய ஆயுதங்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், போதை பொருட்கள் மற்றும் சைக்கிள்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அதேபோல் பஸ் ஓட்டுனர்களின் கவனத்தை சிதைக்கும் நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடக்கூடாது.
பொது போக்குவரத்துக்கான பேருந்துகளை சேதப்படுத்தவோ, தவறான காரியங்களுக்கு உபயோகப்படுத்தவோ கூடாது என்பதுடன் சுத்தமாகவும், குப்பைகள் இன்றியும் வைத்திருக்க வேண்டும். பஸ்ஸை நிறுத்தம் செய்வதற்கான பொத்தானை தேவைப்படும் போது மட்டும் ஒருமுறை மட்டுமே அழுத்த வேண்டும்.
பொது போக்குவரத்து வாகனங்களுக்கள் எந்த வகை மிருகங்களையும் கொண்டு வரக்கூடாது, பார்வையற்றவர் மட்டும் துணைக்கு நாய் ஒன்றை வைத்துக் கொள்ளலாம். பயணிகள் தங்களுடைய லக்கேஜ்களை ஒழுங்காகவும் சக பயணிகளுக்கு தொந்தரவு தராத வகையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பஸ்ஸில் ஏறும் போதே பயணக் கட்டணக் கார்டுகளில் போதுமான அளவு முன்பணம் ஏற்றப்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்டே ஏற வேண்டும். தவறுபவர்கள் மீது குறைந்தபட்சம் 200 திர்ஹம் முதல் அதிகபட்சம் 2,000 திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும். கடும் போக்குடைய பயணிகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்.
அபுதாபியின் எல்லா பொது போக்குவரத்து பயணிகளும் இந்த புதிய மாற்றங்களை சரிவர கடைபிடிக்க வேண்டும் என அபுதாபி பொது போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.