.

Pages

Tuesday, December 19, 2017

தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூய்மை நாள் சிறப்பு கிராம சபை கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் தூய்மை நாள் கொண்டாடுவது தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில்  விவாதிக்கப்படும் பொருள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
இந்தியா முழுவதும் நாளை (20.12.2017) அன்று கிராமங்களில் தூய்மை நாள் அனுசரிக்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி தூய்மை நாள் தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்துவது குறித்தும், வீட்டை சுற்றி குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிப்பது குறித்தும், வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பது குறித்தும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக பராமரித்தல் குறித்தும் போன்றவைகளை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விவாதிக்கப்படவுள்ளது.

தனி நபர் இல்ல கழிப்பறை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்  குழந்தைகள் பாதுகாப்பான முறையில் வளர்க்க முடியும். இரத்த சோகை இல்லாமல் வளர்க்க முடியும்.  தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.  குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகளை தவிர்க்க முடியும் போன்றவை கழிப்பறை பயன்படுத்துவதனால் தூய்மையாக இருப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து சுகாதாரமாக நோய்நொடியில்லாமல் வாழ்வதற்கு வழி வகுக்கும். இது போன்ற கருத்துகளை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொது மக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எடுத்துக் கூற வேண்டும். நாளை நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  பொது மக்களும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும்.  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கும்பகோணம் சார்ஆட்சியர் பிரதீப்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.