அதிராம்பட்டினம், டிச.21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படத்தான்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ~ பங்கஜவள்ளி. இத்தம்பதியின் மகள் பானுப்பிரியா (25) விதவை. இவருக்கு 3-1/2 வயதில் ஹர்னிகா என்கிற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பட்டுக்கோட்டையை சேர்ந்த வசந்தா என்ற பெண், பானுப்பிரியாவின் ஏழ்மையை அறிந்துகொண்டு, அவரிடம் ஆசைவார்த்தைக் கூறி, மலேசியா நாட்டில் உணவகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வரவழைத்துள்ளார். அந்நாட்டிற்கு சென்ற பானுப்பிரியாவை உணவக வேலைக்கு அனுப்பாமல் சீனப் பெண்ணிடம் அந்நாட்டு பணம் 2 ஆயிரம் வெள்ளிக்கு விற்றாராம்.
இதையடுத்து, விலைக்கு வாங்கிய சீனப்பெண், பானுப்பிரியாவை வேலைக்கு அனுப்பாமல் விடுதிக்கு அனுப்பி அங்குள்ள கும்பலால் பாலியல் தொழிலில் ஈடுபட துன்புறுத்தப்பட்டாராம். இதற்கு உடன்படாத பானுப்பிரியா, அக்கும்பலிடமிருந்து தப்பித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை எடுத்துக்கூறி தனக்கு உதவும்படி கோரி இருக்கிறார்.
இதையடுத்து, ஆபத்தில் சிக்கிய பானுப்பிரியாவை எஸ்டிபிஐ கட்சியினர் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து மலேசியா காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள வசந்த என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பானுப்பிரியாவை பத்திரமாக இந்தியா கொண்டு வரும் முயற்சியாக, எஸ்டிபிஐ கட்சி வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழக்குரைஞர் நிஜாமுதீன், நேஷனல் விமன் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் வழக்குரைஞர் சபியா நிஜாமுதீன், எஸ்டிபிஐ தஞ்சை மாநகர் தலைவர் இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிரை அப்துல் ரஹ்மான், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அசாருதீன் ஆகியோர், லெட்சுமி தாயார் பங்கஜவல்லி, உறவினர் கோவிந்தசாமி மற்றும் லெட்சுமி குழந்தை ஹர்னிகா ஆகியோருடன், கடந்த டிச.12 ந் தேதி. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையை சந்தித்து, மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய தமிழகப் பெண் பானுப்பிரியாவை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவருவதற்கான உதவியை அளிக்கக் கோரி மனு அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இக்குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5 ஆயிரத்தை பெண்ணின் தாய் பங்கஜவள்ளியிடம், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் வழங்கி ஆறுதல் கூறினார். அருகில், எஸ்டிபிஐ கட்சி வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழக்குரைஞர் நிஜாமுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அதிரை அப்துல் ரஹ்மான், முகமது புஹாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.