அதிரை நியூஸ்: பிப்.03
துபையில் வாழ்கின்ற மித்ரேஷ் சிங் (51) என்கிற இந்தியர் ஒருவர் கிருஸ்து பிறப்பிற்கு 600 BC ஆண்டுகளுக்கு முன் வந்த நாணயங்கள் உட்பட பல பழங்கால நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த நாணய சேகரிப்பின் மூலம் கடந்த நூற்றாண்டுகளின் இந்தியா குறித்த கலாச்சாரம், வரலாறு, அரசியல், சமூக சமய பண்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் குறிப்பிடுகின்றார்.
மேலும், பழங்கால இந்திய நாணயங்களை சேகரிப்பது தனது உணர்வுகளுடன் ஒன்றிய விஷயம் என்றும் உவகை கொள்கின்றார். 7 வயது முதல் நாணயங்களை சேகரித்து வரும் சிங், இந்த நாணயங்களின் வழியாக வரலாற்றின் தொல்லியல், சிற்பங்கள், மானுடவியல், சமூகவியல், ஆயுதங்கள், ஆபரணங்கள், மத நம்பிக்கைகள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும் எனக்கூறுகிறார்.
மித்ரேஷ் சிங்கிடம் கிருஸ்து பிறப்பிற்கு 600 BC ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்த ஜனபதாஸ் (Janapadas) பேரரசு, 300 BC ஆண்டுகளுக்கு முன் இருந்த மௌரிய பேரரசு, அலெக்ஸான்டரின் இந்திய வெற்றிக்குப் பின் 326 BC ஆண்டுகளில் புழங்கிய நாணயங்கள் போன்றவற்றை சேகரித்துள்ளதுடன் லைடியா Lydia (இன்றைய துருக்கி), இந்தியா மற்றும் சீனாவில் தான் முதன்முதலாக 800 BC முதல் 600 BC வரையிலான ஆண்டுகளில் முதன்முதலாக உலகில் நாணய புழக்கம் பழக்கத்திற்கு வந்திருக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
குப்தா சாம்ராஜ்யமும், முகலாய சாம்ராஜ்யமும் தங்களது நாணயங்களில் சூரியன், சந்திரன், விலங்கினங்கள், தாவரங்கள் போன்றவற்றை நாணயங்களில் பதிப்பிப்பதை மிக நுட்பமாக மேற்கொண்டிருந்துள்ளனர். என் நாட்டுடைய, என் முன்னோர்கள் பயன்படுத்திய நாணயங்களை சேகரிப்பதையும் அதன் மூலம் அவர்களின் வரலாறை அறிந்து கொள்வதையும் தன்னால் இயன்றவரை தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

![]() |
அவாத் மன்னர் வாஜித் அலி ஷாவின் தங்க நாணயம் 1847-1856 |
![]() |
குஷான் பேரரசின் தங்க தினார் 150-190 AD |
![]() |
ஜஹாங்கிரின் சதுர வடிவப் பணம் AH 1025 |
![]() |
மதராஸ் மாகாண தங்க வராகன் 1807-08 |
![]() |
ராணி விக்டோரியா காலத்து தங்க மொஹர் 1841 |
![]() |
ஷாஜஹானின் வெள்ளி நாணயம் AH 1068 |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.