.

Pages

Tuesday, February 13, 2018

துபை விமான நிலையங்களில் டிரான்ஸிட் பயணிகளுக்கு மிகக்குறுகிய நேர (தற்காலிக) விசா வழங்க ஆலோசணை!

அதிரை நியூஸ்: பிப்.13
துபை விமான நிலையங்களில் மிகக்குறுகிய நேர (தற்காலிக) டிரான்ஸிட் விசா வழங்க ஆலோசணை.

துபையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 88.2 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் சுமார் 15.8 மில்லியன் பயணிகள் துபை விமான நிலையங்களில் இரவு மற்றும் குறிப்பிட்ட நேரம் விமான நிலையத்திற்குள்ளேயே காத்திருந்து சென்ற விமானப் பயணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பயணிகளை கவரும் நோக்கத்தில் விமானத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் துபைக்குள் வந்து செல்லும் வகையில் மிக குறுகிய நேரத்திற்கான தற்காலிக டிரான்ஸிட் விசா வழங்கும் திட்டம் குறித்து துபை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது உலகின் முக்கியமான நாடுகளின் பயணிகள் ஆரம்பமாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் எந்தெந்த நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்படவில்லை.

மேலும் "Microcosm of Dubai" எனும் திட்டத்தின் கீழ் பயணிகளை ஈர்க்கும் வகையில் துபையின் சுற்றுலா முக்கியத்துவமுள்ள பகுதிகளான புரூஜ் கலீபா, புரூஜ் அல் அரப், உலகின் பெரிய ஷாப்பிங் மாலான துபை மால் போன்றவற்றை நிஜத்தில் தரிசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் திரையிடல்களும் இடம் பெறவுள்ளன.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.