.

Pages

Tuesday, September 18, 2018

நீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.18
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த காஸ்ஸியா (Kassia) என்ற 1 வயது பெண் குழந்தை யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாகவே நீச்சல் குளத்தின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீச்சலடித்து சென்று படிகளை பற்றி கரையேறுகின்றது. நீந்தும் போது முன்பக்க நீச்சல், பின்பக்க நீச்சல் மற்றும் நீருக்கு மேல் சுழல்வது என பல விந்தைகளையும் வித்தைகளையும் செய்து அசத்துகின்றது.

இத்தனைக்கு காஸ்ஸியாவின் பெற்றோர்கள் அவளது 9வது மாதத்தில் தான் நீச்சல் பயிற்சியை வழங்கியுள்ளனர், தற்போது 12 மாதங்களே நிறைவடைந்துள்ளன. காஸ்ஸியாவின் 3 வயது சகோதரியும் தனது 9வது மாதத்திலிருந்து நீச்சல் பயிற்சி பெற்று அசத்தி வருகிறாள். இவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கி வருவது குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி வழங்குதலில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு பயிற்சியாளர் ஒருவராம்.

Source: Dailymail
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.