.

Pages

Thursday, September 27, 2018

உய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அதிரை நியூஸ்: செப். 27
ஜீ ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிச அரசு ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லீம்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைப்பது அவர்களின் குழந்தைகளை அனாதைகள் என முத்திரையிட்டு உய்குர் இன கலாச்சாரத்தை முற்றாக மறக்கச்செய்து சீன கலாச்சாரத்தை திணிக்கும் பள்ளிகளில் அடைத்து வளர்ப்பது, மார்க்கக் கடமைகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

உய்குர் இன மக்களுக்கு எதிராக சீன கம்யூனிச அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுவதை தொடர்ந்து சீன அரசு 'உய்குர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பெருகும்' என கதையளக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் வாழும் முஸ்லீம்கள் உய்குர் இன முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் சீன அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக மிகப்பெரும் விழிப்புணர்வு நிகழ்வாகும்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே வீறுகொண்டு நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த அறப்போராட்டங்கள் மூலம் உலக முஸ்லீம்களையும், பிற மத நியாயவான்களை தட்டியெழுப்ப இயலும். இன்னொரு ரோஹிங்கியாவாக உய்குர் மாறுமுன் சீனாவை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள்' அவசியம்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.