.

Pages

Tuesday, September 18, 2018

அமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்மார்ட் ஆப் வெளியீடு!

அதிரை நியூஸ்: செப்.18
அமீரக உள்துறை அமைச்சகமும் (The Ministry of Interior) அமீரக மோட்டார் வாகனம் மற்றும் சுற்றுலா மன்றமும் (Automobile & Touring Club of the UAE) இணைந்து சர்வதேச டிரைவிங் லைசென்ஸிற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் ஸ்மார்ட் ஆப்  (Smart App) மற்றும் இணைய தள சேவைகளை அமீரகத்தினர் மற்றும் அமீரகம் வாழ் வெளிநாட்டினரின் வசதிக்காக வெளியிட்டுள்ளன.

تطبيق  وزارة الداخلية يوفر خدمة تقديم طلب الحصول على رخصة القيادة الدولية

MoI Enables Customers to Apply for International Driving License via its app MOI UAE
https://t.co/UMBxJ6quJCpic.twitter.com/uNyrobkeC5— MOIUAE (@moiuae) September 15, 2018

அமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ்களை வழங்குவதற்கான உரிமையை அமீரக மோட்டார் வாகனம் மற்றும் சுற்றுலா மன்றம் (Automobile & Touring Club of the UAE) கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் பெற்று வழங்கி வருகின்றது. தற்போது அமீரக உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து இச்சேவையை தொடர்ந்து வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இச்சேவைக்கான ஆப் முகவரி (MOI UAE) என்பதாகும்.

சர்வதேச லைசென்ஸ் மூலம் கிடைக்கும் பயன்கள்:
இந்த சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் 1 வருடம் வரை செல்லுபடியாகக்கூடியது. 10 சர்வதேச மொழிகளில் சேவை வழங்கப்படுவதுடன் வெளிநாட்டில் வாகனம் ஓட்டும் போது இந்த ஆப்பின் மூலம் தேவையான ஆவண உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் வாகனம் ஓட்டும் போது ஏதேனும் வாகன விபத்துக்களில் சிக்க நேர்ந்தால் வாகன ஓட்டுனருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேருதவியாக அமையும். இன்ஷூரன்ஸ் இழப்பீடுகளை பெற முடியும். பாஸ்போர்ட் தொலைந்து போனால் மாற்று அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.