.

Pages

Saturday, September 22, 2018

துபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் குறித்து சுயமாக அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!

அதிரை நியூஸ்: செப்.22
துபை எமிரேட்டில் நம் மீது நிதி சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகள் (Criminal Financial Cases) ஏதும் பதிவாகியுள்ளதா? அல்லது நிதிசார் குற்றங்களுக்காக நம் மீது பயணத்தடை (Travel ban due to financial cases) ஏதும் விதிக்கப்பட்டுள்ளா? என்பதை அறிய இனி கம்பெனிகளின் பி.ஆர்.ஓ அல்லது நீதிமன்றங்களை எதிர்பார்த்திருக்கத் தேவையில்லை.

துபை எமிரேட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள போலீஸ் நிலையங்களில் நிதி சம்பந்தமான குற்றங்களில் பதிவாகியுள்ள வழக்குகள் மற்றும் நிதிசார் குற்றங்களின் காரணமாக நம் மீது பயணத்தடை ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் நமக்கு நாமே துபை போலீஸ் ஆப் அல்லது இணைய தளத்தை இலவசமாக பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என துபை போலீஸின் செயற்கை அறிவுத்துறையின் இயக்குனர் பிரிகேடியர் காலித் நாஸர் அல் ரஸூக்கி தெரிவித்துள்ளார்.

எனினும் நிதி குற்ற வழக்குகள் குறித்து அறிந்து கொள்ள எமிரேட்ஸ் ஐடி (Valid Emirates ID) அவசியம் தேவை. கீழ்க்காணும் முறையை பயன்படுத்தி துபை போலீஸ் ஆப் அல்லது இணைய தளம் வழியாக விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

How to check if you have a travel ban:
■  Visit dubaipolice.go.ae or download the Dubai Police app on Android or iOS
■  Click on ‘Services’ link
■  Click on ‘Individuals’
■  Search for ‘criminal status of financial cases’
■  Enter the service using Emirates ID
■  Call 901 for more information about the service

குறிப்பு: இந்த வசதி துபை எமிரேட்டில் மட்டுமே தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.