.

Pages

Sunday, September 23, 2018

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ~ ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம்,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெறும் சிறப்பு முகாம்களை  தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான வள்ளலார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களுடன் இன்று (23.09.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையிலும் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பேசியதாவது : -
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் 09.09.2018, 23.09.2018, 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் 01.09.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்  வெளியிடப்பட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், வாக்காளர் பட்டியல் பார்வையாளராகிய என்னிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் பேசினார்.

அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்ட தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், அங்கிருந்த பொது மக்கள், பேருந்து பயணிகள், இளைஞர்கள், மாணவ மாணவியர்களிடம் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கணபதி நகர், பி.வி.செல்வராஜ் மகளிர் மேல் நிலைப்பள்ளியிலும், தஞ்சாவூர் வட்டம், காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு வட்டம், நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்ய வந்த பொது மக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, உரிய விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான வள்ளலார் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி,  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) காளிமுத்து, வட்டாட்சியர்கள் அருணகிரி (தஞ்சாவூர்), ரமேஷ் (ஒரத்தநாடு), தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.