.

Pages

Thursday, September 20, 2018

நடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,300 பேர் ஹஜ் நிறைவேற்றம்!

அதிரை நியூஸ்: செப்.20
இந்த வருட ஹஜ்ஜை மன்னர் சல்மானின் தனிப்பட்ட சொந்த செலவின் கீழ் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து 5,300 பேர் ஹஜ்ஜை நிறைவேற்றினர். இவர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாடுகள் மக்கள் மற்றும் பயங்கரவாத செயல்களால் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினர் போன்றவர்களே.

இஸ்ரேலின் கொடூர வன்முறைகளால் கொல்லப்பட்ட 1,000 பாலஸ்தீனிய தியாகிகளின் குடும்ப அங்கத்தவர்கள், சூடான் மற்றும் ஏமன் தேசிய ராணுவத்தில் பணியாற்றிய போது கொல்லப்பட்ட ராணுவம் மற்றும் போலீஸார் குடும்பத்தை சேர்ந்த 1,500 பேர், இதேபோல் எகிப்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினராக இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 1,000 பேர், கினியா பிஸ்ஸோ என்ற ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்த 500 பேர், மேலும் 94 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் என 5,300 பேர் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இந்த வருட ஹஜ்ஜை நிறைவேற்றிச் சென்றுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.