.

Pages

Thursday, September 27, 2018

அதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.27
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், குடிநீர் கட்டணம், வீடு, கடை வரி உயர்வு, வறண்ட குளங்களுக்கு நீர் நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகில் இன்று (செப். 27) வியாழக்கிழமை காலை நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ்  தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் எஸ். பன்னிர்செல்வம், எம்.எல்.ஏ  ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு. அ பாரதி கண்டன உரை நிகழ்த்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் வீ.கல்யாணசுந்தரம், ப. காசிநாதன், மாநில குழு உறுப்பினர்கள் இரா. திருஞானம், சி.பக்கிரி சாமி, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.எம் மார்க்ஸ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.ஆர் நாதன், ஏ.ஐ.ஒய்.எப் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஹாஜா முகைதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.எச் பஷீர் அகமது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் குடிநீர், வீடு, கடைகளுக்கு பல மடங்கு வரி உயர்வை திரும்ப பெறக் கோரியும், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர வேண்டும் எனவும், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலை மற்றும் அதிராம்பட்டினம் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை சந்திப்பில் ரவுண்டான கட்டித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட அக்கட்சியினர் 100 பேர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.