அதிராம்பட்டினம், செப்.24
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அதிராம்பட்டினம் கடைமடை பகுதிக்கு தாமதமின்றி தண்ணீர் திறந்து விடக்கோரியும், அதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர் கொண்டு வருவதற்கான திட்டத்தை செயல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளை இன்று (செப்.24) திங்கட்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியில் காணப்படும் ஏரி, குளங்கள், விவசாய நிலங்களுக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி, கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் மனுக்கள் அளித்து இருந்தும், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதில் தாமதமாகின. இதையடுத்து, கடந்த செப்.17 ந்தேதி அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 க்கும் மேற்பட்ட நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், ஆகியோர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று (செப்.24) திங்கட்கிழமை 4-வது முறையாக, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
மேலும், அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிக்காடு மகாராஜா சமுத்திர அணையிலிருந்து கடலுக்கு வீணாக வெளியேறும் நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம் பகுதிக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, வரைவு திட்டத்தை தயாரித்து ஒப்புதல் அளிக்க கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அக்னியாறு கோட்ட உதவி செயற்பொறியாளர் செல்லமுத்து ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதில், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஜமீல் முகமது சாலிகு, மு.காதர் முகைதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், சேக்கனா நிஜாம் (எம்.நிஜாமுதீன்), முகமது சிராஜுதீன், எம்.ஓ செய்யது முகமது புஹாரி, அதிரை அகமது ஹாஜா, அப்துல் கபூர், எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

![]() |
நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர் மு.காதர் முகைதீன் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் திரு.முருகேசன் அவர்களிடம் மனு அளித்த போது |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.