அதிரை நியூஸ்: செப். 25
நடப்பாண்டில் 23.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் செய்துள்ளனர் விமான சேவையும் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த வருடம் ஹஜ்ஜூக்காக வந்த பன்னாட்டு யாத்ரீகர்களை திரும்ப சுமந்து செல்லும் விமானங்களின் சேவை இன்று நிறைவடைகிறது அதாவது வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் இன்றுடன் சவுதியை விட்டு வெளியாகின்றனர். இந்த வருட ஹஜ் யாத்திரையை சுமார் 23.8 மில்லியன் பேர் நிறைவேற்றியுள்ளதாக சவுதி புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது. General Authority for Statistics (GaStat).
மொத்தம் 2,371,658 பேரில் 1,758,722 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர். எஞ்சியோர் சவுதி மற்றும் சவுதியர் அல்லாத உள்நாட்டு யாத்ரீகர்களாவர். உள்நாட்டு யாத்ரீகர்களை 23,289 வாகனங்கள் சுமந்து வந்துள்ளன.
இந்த வருட ஹஜ்ஜை நிறைவேற்றி உள்நாட்டு யாத்ரீகர்களில் 40.7 சதவிகித்தில் பாகிஸ்தானியர் 11.8%, இந்தியர் 11.3%, ஏமனியர் 9.9%, சூடானியர் 4.2% மற்றும் 22.1 சதவிகிதத்தினர் சவுதிவாழ் பன்னாட்டினர்.
இந்த வருட ஹஜ்ஜின் போது சுமார் 280,000 அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சேவையாற்றியுள்ளனர். இவர்களில் 12,000 பெண் ஊழியர்களும் அடக்கம். பெண் ஊழியர்கள் மேற்பார்வை பணிகள் (Supervisions), பணிகளை பின்தொடர்ந்து முடித்தல் (Follow ups), பொது சேவைகள் (General Services), சுகாதாரம் (Health), போக்குவரத்து (Transport) மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் (Communication Fields) ஈடுபடுத்தப்பட்டனர்.
சுமார் 1.6 மில்லியன் (94%) வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் விமானங்கள் மூலம் வருகை தர சுமார் 85,000 (5%) தரைவழி போக்குவரத்து மூலமும் சுமார் 16,000 பேர் (1%) கடல் மார்க்கமாகவும் வருகை தந்தனர்.
612,053 உள்நாட்டு மொத்த யாத்ரீகர்களில் 118,554 பேர் சவுதி ஆண்கள், 63,182 பேர் சவுதி பெண்கள். மொத்த உள்நாட்டு யாத்ரீகர்களில் எகிப்தியர்கள் சுமார் 41% பேர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.