.

Pages

Tuesday, September 25, 2018

துபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ஸ்மார்ட் ரென்டல் கார்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு!

அதிரை நியூஸ்: செப். 25
துபையில் கடந்த 18 மாதங்களாக ஸ்மார்ட் ரென்டல் எனும் வாடகை கார்களின் சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவையை துபை போக்குவரத்து துறையுடன் (RTA) இணைந்து Udrive மற்றும் Ekar ஆகிய நிறுவனங்கள். துபை முழுவதும் சுமார் 45 மையங்களிலிருந்து சேவை வழங்கி வருகின்றன. இந்த கார்களை வாடகைக்குப் பெறவும் பின் மீண்டும் திரும்பவிடவும் எந்த மனிதர்களின் நேரடி உதவியும் தேவையில்லை. இந்தத் கார்களை வாடகைக்குப் பெற Udrive or ekar (mobile apps) ஆகிய ஆப் வழியாக ஒருமுறை பதிவு செய்திருந்தாலே போதுமானது. யூனியன், ராஷிதியா, பர்ஜூமான், பிள்னஸ் பே மற்றும் இப்னு பதூதா ஆகிய மெட்ரோ நிலையங்கள் அருகிலும் ஸ்மார்ட் ரென்டல் கார் சேவை மையங்கள் உண்டு.

இந்த ஸ்மார்ட் ரென்டல் கார்களை துபை எமிரேட்டுக்குள் மட்டும் தான் இயக்க முடியும் வெளியே பிற எமிரேட்டுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. நிமிடத்திற்கு 50 Fils (காசுகள்) அல்லது மணிக்கு 30 திர்ஹம் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். காரை வாடகைக்கு எடுத்த இடத்திலேயே திரும்பக் கொண்டு வந்துவிட்டால் நிமிடத்திற்கு 40 காசுகள் மட்டுமே அதேபோல் மணிக்கு 24 திர்ஹங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். காரை திரும்ப விடும்போது ஆப் )app) வழியாகவே பூட்டிவிட்டுச் செல்லலாம். அதிகபட்சம் ஒரு வாடிக்கையாளர் ஒருநாளைக்கு 6 மணிநேரத்திற்கு மட்டுமே இந்தக் கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த ஸ்மார்ட் ரென்டல் கார்களை வாடகைக்கு எடுத்தவுடன் துபையிலுள்ள ஏதாவது ஒரு எப்கோ (Eppco) அல்லது அட்னாக் (Adnoc) பெட்ரோல் பங்கிற்கு சென்று இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம், இலவசமாக A.B.C,D ஆகிய பார்க்கிங் மண்டலங்களில் (Parking Zones) பார்க்கிங் செய்து கொள்ளலாம், கோல்டு சூக், டீகாம், டவுண்டவுன் துபை ஏரியாக்கள் தவிர. மேலும் காரை ஓட்டும் போதுள்ள நேரத்திற்குரிய இலவச கார் இன்ஷூரன்ஸூம் உண்டு. இந்த சேவையில் இதுவரை 200 கார்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தநிலையில் தற்போது இருமடங்காக அதாவது 400 கார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கார்கள் எந்தெந்த வாடகை மையங்களில் தயாராக உள்ளன என்பதையும் அதே ஆப் மூலம் மேப் (வரைபடம்) வழியாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த கார்களை வாடகைக்குப் பெற மேற்கூறப்பட்ட ஆப்கள் வழியாக உங்களது எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசென்ஸ், கிரடிட் டெபிட் கார்டு விபரங்கள் மற்றும் உங்களது சுய செல்ஃபி போட்டோ ஒன்று ஆகியவற்றை பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல் விசிட் விசாவில் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட், என்ட்ரி விசா விபரங்கள், கிரடிட் கார்டு விபரங்கள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஒன்று தரப்படும் (Unique personal identification number). அந்த எண்ணை கொண்டே அந்தக் கார்களில் உள்ள கருவியில் உள்ளிட்டு காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும். பயன்பாட்டிற்குப் பின் உங்களுக்கான கட்டண விபரங்கள் ஆன்லைன் வழியாக வந்து சேரும்.

இந்த ஸ்மார்ட் கார்களில் உலகின் அதிநவீன கார்களான மினிகூப்பர், வாக்ஸ்வேகன், இன்பினிட்டி, நிஸ்ஸான் போன்றவையும் உண்டு. விரைவில் பிஎம்டபள்யூ, பென்ஸ் போன்ற வாகனங்களும் இணைய உள்ளன. இதோபோன்றதொரு சேவை ஷார்ஜாவிலும் துவங்கப்பட்டுள்ளதுடன் அவை அஜ்மானுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது எனினும் ஷார்ஜாவிலிருந்து துபைக்கோ அல்லது துபையிலிருந்து ஷார்ஜாவிற்கோ செல்ல அனுமதியில்லை என்றாலும் விரைவில் அனைத்து எமிரேட்டுகளுக்கும் சென்று வரும் வகையில் வழிவகை செய்யப்படும் என்று வாடகை கார் நிறுவனங்களால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sources: Khaleej Times & Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.