.

Pages

Friday, September 28, 2018

சவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்களுக்கு புதிய சுற்றுலா விசா அறிமுகம்!

அதிரை நியூஸ்: செப். 28
சவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்களுக்கு டிசம்பர் 15 முதல் புதிய சுற்றுலா விசா அறிமுகம்

சவுதியில் கச்சா எண்ணெய்க்கு மாற்றுப் பொருளாதாரத் திட்டங்கள் என்ற பெயரில் சவுதி அரேபியாவின் இயல்பான காலச்சார சூழல்களுக்கு மாற்றமான சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அறிந்ததே.

அந்த வகையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சவுதியில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்க விரும்பும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு என சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளது சவுதி.

சவுதியில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் தேதி The Saudia Diriyah E Prix - motor race என்ற பெயரில் ஓர் மோட்டார் வாகனப் பந்தயம் நடைபெறவுள்ளதை தொடர்ந்து இத்தகைய விசாக்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இனி உங்களுடைய டிக்கெட்டுகளே உங்களுடைய விசாக்கள் என இளவரசர் அப்துல் அஜீஸ் பின் துர்கி அல் பைசல் தெரிவித்தார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.